News September 11, 2025
சென்னையில் 12 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (11.09.2025) 12 இடங்களில் நடைபெற உள்ளது. திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் முகாம்கள் நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இம்முகாம்கள் நடைபெறும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 11, 2025
சென்னையில் தூய்மை பணியாளர்களின் சம்பளம் உயர்வு

ராயபுரம் மற்றும் திருவி.க.நகர் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் தினசம்பளத்தை உயர்த்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி பணியின் வகைபோல் தினசம்பளம் ரூ.761 முதல் ரூ.965 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மாத வருமானம் சுமார் ரூ.19,700 முதல் ரூ.25,000 இருக்கும். ஊழியர்களுக்கு கட்டண விடுப்பு, காப்பீடு, மருத்துவ பரிசோதனை, பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவைகளும் வழங்கப்பட உள்ளன.
News September 11, 2025
சென்னை வரும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் செப்.14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை வருகிறார். தொடர்ந்து ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக பாஜக சார்பில் பல இடங்களில் கட்சிக் கூட்டங்கள் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொண்டு ஜிஎஸ்டி பற்றிய விளக்கவுரை அளிக்கவுள்ளார்.
News September 11, 2025
சென்னையில் இங்கு நாளை தண்ணீர் வராது

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களுக்குட்பட்ட பல பகுதிகளில் நாளை (செப்.12) காலை முதல் மறுநாள் அதிகாலை வரை குடிநீர் வழங்கப்படாது என CMWSSB தெரிவித்துள்ளது. மேலும், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால், https://cmwssb.tn.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.