News September 11, 2025
சேலம் காவல்துறை அசத்தல் அறிவிப்பு!

சேலம் மாநகர காவல்துறை சார்பில் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் “உங்கள் வாகனங்களில் டேஷ் கேமரா பொருத்தி, அதைப் புகைப்படம் எடுத்து சேலம் மாநகர காவல் துறையின் முகநூல் பக்கத்தில் பதிவிட வேண்டும். இவ்வாறு பதிவிடும் முதல் ஐந்து நபர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதனை கார் வைத்துள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News September 11, 2025
சேலம் 1 லட்சத்தை கடந்த உரிமைத்தொகை மனுக்கள்!

கடந்த மாதம் 15ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் சேலத்தில் துவங்கியது. இந்த முகாமில் அனைத்து விதமான குறைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி ஏராளமான மனுக்கள் குவிந்துள்ளன. அதன்படி, நேற்று வரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு 1,01,726 மனுக்கள் குவிந்து இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
சேலம்: தமிழ் கனவு நிகழ்ச்சி மாணவர்களுக்கு சான்றிதழ்!

சேலம் அரசு சட்டக் கல்லூரியில் தமிழக அரசின் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேராசிரியை பர்வீன் சுல்தானா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தமிழ் அருமை பெருமைகளையும், அதன் தொன்மையும், எடுத்துக் கூறினார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியை ஒட்டி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் வழங்கப்பட்டது.
News September 11, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு!

ரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்.12- ஆம் தேதி அன்று மட்டும் போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (66616), மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயில் (66617) முற்றிலும் ரத்துச் செய்வதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் (16843) மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் கோவை ரயில் நிலையங்களில் நிற்காது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.