News September 11, 2025
சூறாவளி கிளம்பியதே.. WCக்கு குறிவைத்த ரோஹித்

இந்திய அணியின் ODI கேப்டன் ரோஹித் சர்மா தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சில மாதங்களாக கிரிக்கெட் களம் காணாமல் இருந்தார். இந்நிலையில் ஆஸி. எதிரான ODI தொடருக்கு தயாராக பயிற்சியை தொடங்கியுள்ளார். ரோஹித் அணியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக வதந்திகள் பரவினாலும், 2023ல் தவறவிட்டதை 2027ல் அடையும் எண்ணத்துடன் அவர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Similar News
News September 11, 2025
நாமக்கல் : விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில், தமிழக அரசின் வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. நாமக்கல்லில் உள்ள அரசு தோட்டக்கலைத் துறை பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் சவுக்கு, தேக்கு, மகாகனி ஆகிய மரக்கன்றுகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
News September 11, 2025
மீண்டும் சரிந்த சந்தைகள்.. முதலீட்டாளர்கள் கலக்கம்!

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று(செப்.11) சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 207 புள்ளிகள் சரிந்து 81,217 புள்ளிகளிலும், நிஃப்டி 27 புள்ளிகள் சரிந்து 24,945 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. ICICI Bank, Dr Reddys Labs, Hero Motocorp உள்ளிட்ட முக்கிய நிறுவங்களின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.
News September 11, 2025
7 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்ட நாயகன்: குல்தீப் கம்பேக்

ஆசிய கோப்பை தொடரில், தனது முதல் போட்டியை இந்தியா அதிரடியாக துவங்கியுள்ளது. குறிப்பாக, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் மிரட்டிவிட்டார். 7 ஆண்டுகளுக்கு பிறகு டி20 மேட்ச்சில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார். எனவே, அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால், இங்கி.,க்கு எதிரான தொடரில் விளையாடிய இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. நீங்க என்ன நினைக்கிறீங்க?