News September 11, 2025
விழுப்புரத்தில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
Similar News
News September 11, 2025
விழுப்புரம்: இன்று இங்கெல்லாம் மின் தடை

விழுப்புரம் மாவட்டத்தில், பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று (செப்.11) காலை 9 – மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மின்நிறுத்தம் நடைபெற உள்ள பகுதிகள்:
▶️ கண்டமங்கலம்
▶️ வழுதாவூர்
▶️ பி.எஸ்.பாளையம்
▶️ நவமால்காப்பேரி
▶️ கலிங்கமலை
▶️ வெள்ளாழங்குப்பம்
▶️ கோண்டூர்
▶️ ஆழியூர்
▶️ பெரிய பாபுசமுத்திரம்
▶️ தாண்டவமூர்த்திகுப்பம்
▶️ பூசாரிப்பாளையம்
▶️ வி.பூதூர்
News September 11, 2025
விழுப்புரம்: நொடியில் நேர்ந்த சோகம்

விழுப்புரம் கோலியனூரான் வாய்க்கால் தெருவைச் சோ்ந்தவா் ராதா(40). விழுப்புரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். இவா் நேற்று காலை பள்ளிக்கு பணிக்கு சென்றபோது வழியில் மயங்கி கீழே விழுந்தார். பொதுமக்கள் மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
News September 10, 2025
விழுப்புரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.,10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.