News September 11, 2025

வார விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு கிளாம்பக்கத்திலிருந்து, திருச்சி, மதுரை, சேலம், திருவண்ணாமலை, கோயம்பத்தூர், நாகர்கோவில், திருப்பூர், கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு வரும் செப். 12-ந்தேதி 355 சிறப்பு பேருந்துகளும், செப். 13-ந்தேதி 350 பேருந்துகளும் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Similar News

News September 11, 2025

செங்கல்பட்டு: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

image

செங்கல்பட்டு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (SHARE பண்ணுங்க)

News September 11, 2025

செங்கல்பட்டு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 2ம் நிலை காவலர், சிறை காவலர் (ம) தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் மேற்கண்ட பதவிகளுக்கு எழுத்து தேர்விற்கான இலவச பயிற்சி, செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 12-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், விபரங்களுக்கு 044- 2742 6020 எண்ணை அழைக்கலாம்.

News September 11, 2025

மறைமலைநகர் அருகே சிறுவனுக்கு சூடு வைத்த கொடூரம்

image

மறைமலைநகர் பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்யப்படுவதாக, மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று, போலீசார் விசாரித்தனர். இதில், சிறுவனின் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சிறுவனின் தந்தையும், சித்தியும் சேர்ந்து, சிறுவனை தாக்கி, உடலில் பல்வேறு இடங்களில் சூடு வைத்தது தெரிந்தது.

error: Content is protected !!