News September 11, 2025

கோவை: ஏரியில் மூழ்கி உயிரிழப்பு

image

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (74). ரத்த அழுத்தம் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று குறிச்சி ஏரியில் மூழ்கி உயிரிழந்து கிடந்து உள்ளார். பின்னர் குறித்து தகவல் அறிந்த போத்தனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, உடனே மீட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 11, 2025

கோவையில் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!

image

கோவை மாநகரில் கடந்த எட்டு மாதங்களில் 18 வயதுக்கு உட்பட்டோரால் 11 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 4 பேர் உயிரிழந்தனர், 7 பேர் காயமடைந்தனர். 11 வாகன ஓட்டுனர்களின் பெற்றோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுவர் பைக் ஓட்டுவதை ஊக்குவிக்கும் பெற்றோர் தவிர்க்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

News September 11, 2025

உஷார் மக்களே கோவையில் இப்படியும் மோசடி!

image

“உங்கள் எஸ்பிஐ கணக்கு முடக்கப்படும், இந்த இணைப்பைக் கிளிக் செய்து பான் விவரங்களைப் புதுப்பிக்கவும்” என்ற வாசகத்துடன், எஸ்பிஐ வங்கி பெயரில் வரும் போலி எஸ்எம்எஸ் மோசடிகள் குறித்து கோவை மாநகர காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. இது போன்ற போலி இணைப்புகளைத் திறக்க வேண்டாம். பொதுமக்கள் சைபர் மோசடிகள் குறித்து புகாரளிக்க, www.cybercrime.gov.in அல்லது 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணைப் பயன்படுத்தலாம்.SHAREit

News September 10, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (10.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!