News September 11, 2025

ராசி பலன்கள் (11.09.2025)

image

➤ மேஷம் – பொறுமை ➤ ரிஷபம் – மேன்மை ➤ மிதுனம் – ஆதரவு ➤ கடகம் – போட்டி ➤ சிம்மம் – மகிழ்ச்சி ➤ கன்னி – ஆதாயம் ➤ துலாம் – அன்பு ➤ விருச்சிகம் – இன்பம் ➤ தனுசு – நன்மை ➤ மகரம் – சோர்வு ➤ கும்பம் – விவேகம் ➤ மீனம் – பகை.

Similar News

News September 11, 2025

₹2,000 மகளிர் உரிமை தொகை.. வெளியான தகவல்

image

மகளிர் உரிமை தொகையை ₹2,000ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சாத்திய கூறுகளை ஆராய நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2026 தேர்தலில் அதிமுக வென்றால் ₹2,000 உரிமை தொகை வழங்கப்படும் என EPS தெரிவித்த நிலையில், ஆளும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நிதித்துறை சாதகமான அறிக்கை தந்தால் வரும் ஜன. முதல் உரிமை தொகை ₹2,000ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

News September 11, 2025

EPS மீது சிலருக்கு வயிற்றெரிச்சல்: உதயகுமார்

image

கட்சி ஒற்றுமை என்ற பெயரில் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என சிலர் கனவு காண்பதாக ஆர்.பி.உதயகுமார் சாடினார். EPS-ன் சுற்றுப் பயணத்தை பொறுக்க முடியாமல் சிலருக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும், இப்படிப்பட்டவர்களுக்கு தோல்விதான் பரிசாக கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 2026ல் EPS தலைமையில் அம்மாவின் ஆட்சி அமைவது உறுதி எனவும் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

News September 11, 2025

மசோதா வழக்கு.. மத்திய அரசுக்கு SC கேள்வி

image

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான வழக்கில் கவர்னர்கள் பதவி பிரமாணத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு SC-ல் வாதிட்டது. சில நேரங்களில் மசோதாக்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய கவர்னருக்கு உரிமை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு SC கூட்டாட்சி முறையில் கலந்து பேசும் அம்சம் இருக்கையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருப்பதை ஏற்க முடியுமா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.

error: Content is protected !!