News September 10, 2025
பொங்கல் ரேஸில் பின்வாங்கும் பராசக்தி

பொங்கலுக்கு வெளியாகும் விஜய்யின் ஜனநாயகனுடன், சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ மோத உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது பராசக்தி படக்குழு, முடிவை மாற்றியுள்ளதாக ஒரு தகவல் தீயாய் பரவுகிறது. இதற்கு காரணம் ‘மதராஸி’ படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததுதான். இதனால் விஜய்யுடன் மல்லுக்கட்டி சேதாரமடைய வேண்டாம் என படக்குழு நினைக்கிறதாம். சோலோ ரிலீஸ் செய்து கல்லா கட்டலாம் என திட்டமிடுகின்றனராம்.
Similar News
News September 11, 2025
மசோதா வழக்கு.. மத்திய அரசுக்கு SC கேள்வி

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான வழக்கில் கவர்னர்கள் பதவி பிரமாணத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு SC-ல் வாதிட்டது. சில நேரங்களில் மசோதாக்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய கவர்னருக்கு உரிமை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு SC கூட்டாட்சி முறையில் கலந்து பேசும் அம்சம் இருக்கையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருப்பதை ஏற்க முடியுமா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.
News September 11, 2025
வெண்மேகமே பெண்ணாக உருவான மீனாட்சி சவுத்ரி

மீனாட்சி சவுத்ரியின் சமீபத்திய இன்ஸ்டா புகைப்படங்களை பார்த்து வெண்மேகம் பெண்ணாக உருவானதோ பாடலை ரசிகர்கள் ரிபீட் மோடில் உருகி உருகி பாடி வருகின்றனர். அவரிடம் மனதை பறிகொடுத்த ரசிகர்கள் இவ்வருடம் உலக அழகி போட்டியெல்லாம் நடத்த தேவையில்லை என்கின்றனர். இதுவரை 2 தமிழ் படங்களில் மட்டுமே மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இனி அவர், அதிக தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோள்.
News September 11, 2025
UAEக்கு எதிராக பும்ரா ஆடணுமா? அஜய் ஜடேஜா

UAE-க்கு எதிரான போட்டியில் பும்ரா தேர்வு செய்யப்பட்டதை அஜய் ஜடேஜா விமர்சித்துள்ளார். எப்போதும் பும்ராவை பதுக்கும் நீங்கள் UAE-க்கு எதிராக அவரை ஆட வைக்க வேண்டிய அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளார். பும்ரா காயமடைவதை தவிர்க்க விரும்பினால் இதுபோன்ற போட்டிகளில் ஆட வைக்காதீர்கள் அல்லது அவரை பாதுகாக்காதீர் என்று கூறினார். இங்கி. எதிரான முக்கியமான தொடரில் பும்ரா 3 டெஸ்ட்டில் மட்டுமே விளையாடினார்.