News September 10, 2025
Parenting: ஆண் குழந்தைகளுக்கும் இதை சொல்லிக் கொடுக்கலாமே!

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அவர்களுக்கு பெற்றோர்கள் GOOD TOUCH, BAD TOUCH சொல்லிக் கொடுக்கின்றனர். ஆனால், ஆண் குழந்தைகளுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு தேவைப்படும் என பலருக்கு தெரிவதில்லை. ஆண் குழந்தைகளும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதால் அவர்களுக்கும் GOOD TOUCH, BAD TOUCH சொல்லிக்கொடுப்பது அவசியமாகிறது. உங்கள் குழந்தைகளுக்கு இதை இன்றே கற்பியுங்கள். SHARE.
Similar News
News September 11, 2025
அரைக்கம்பத்தில் அமெரிக்க கொடி: டிரம்ப் உத்தரவு

சார்லி கிர்க் மறைவுக்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்க இளைஞர்களின் மனதை புரிந்து கொண்டதில் சார்லியை விட சிறப்பானவர் யாருமில்லை என தனது SM-ல் டிரம்ப் பதிவிட்டுள்ளார். சார்லி கிர்க் எல்லோராலும் விரும்பப்பட்டவர் என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், அமெரிக்கா முழுவதும் வரும் ஞாயிறு மாலை 6 மணி வரை அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
News September 11, 2025
புத்தர் பொன்மொழிகள்

*நிம்மதிக்கான இரண்டு வழிகள். விட்டு கொடுங்கள். இல்லை விட்டு விடுங்கள். *உண்மைக்கு மகத்தான சக்தி உண்டு. அதை எவராலும் மாற்றிடவோ மறைத்திடவோ இயலாது. உண்மையை அழிக்கும் சக்தி எவருக்கும் இல்லை. *தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள். *உன் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால், எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும்.
News September 11, 2025
சூறாவளி கிளம்பியதே.. WCக்கு குறிவைத்த ரோஹித்

இந்திய அணியின் ODI கேப்டன் ரோஹித் சர்மா தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சில மாதங்களாக கிரிக்கெட் களம் காணாமல் இருந்தார். இந்நிலையில் ஆஸி. எதிரான ODI தொடருக்கு தயாராக பயிற்சியை தொடங்கியுள்ளார். ரோஹித் அணியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக வதந்திகள் பரவினாலும், 2023ல் தவறவிட்டதை 2027ல் அடையும் எண்ணத்துடன் அவர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.