News September 10, 2025

மழைக்காலத்தில் சாப்பிட ‘ருசியான ஸ்நாக்ஸ்’

image

கையில் டீ, மழைத் துளிகளின் ஓசை, மெல்லிய இசை, மனதுக்கு அமைதியை கொடுக்கும் மண்வாசனை என மழைக்காலத்தின் மாலை வேளைக்கு இணை எதுவும் இல்லை. அழகான மாலை வேளைக்கு, மேலும் அழகை கொடுப்பது நம் கையில் வைத்திருக்கும் ஸ்நாக்ஸ் தான். மழைக்காலத்தில் என்னென்ன ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் என்று மேலே உள்ள புகைப்படங்களில் காணலாம். உங்களுக்கு பிடித்தது எது என்று கமெண்ட் செய்யுங்கள்.

Similar News

News September 11, 2025

ஜனாதிபதி ஆகி இருப்பேன்: ராமதாஸ்

image

தான் நினைத்திருந்தால் ஜனாதிபதி ஆகியிருக்க முடியும் என ராமதாஸ் கூறியுள்ளார். எல்லா பிரதமர்களும் தனது நண்பர்கள் என்றும் PM மோடி தமிழகம் வந்தால் தன்னை கட்டியணைத்துக் கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என குறிப்பிட்ட ராமதாஸ், தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே தனது நோக்கம் என்றார்.

News September 11, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 455 ▶குறள்: மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும். ▶பொருள்: மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.

News September 11, 2025

ஆசிய கோப்பையில் இன்று Ban Vs HK

image

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று குரூப் B-ல் இடம்பெற்றுள்ள வங்கதேசம் – ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. ஹாங்காங் தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் 94 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருந்தது. இந்த போட்டியில் தோற்றால் தொடரிலிருந்து வெளியேற நேரிடும். லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி ஹாங்காங்-ஐ விட வலுவாக காணப்படுகிறது. எனவே, இன்றைய போட்டியில் வங்கதேசம் வெல்லவே அதிக வாய்ப்புள்ளது.

error: Content is protected !!