News September 10, 2025

தி.மலை விவசாயிகளுக்கு ரூ.7.64 கோடியில் நலத்திட்டங்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு தோட்டக்கலை மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், ரூ.7.64 கோடி நிதியுடன் 1048 ஏக்கரில் நுண்ணீர் பாசனம், பழம் சாகுபடி, காய்கறி விற்பனை வண்டி உள்ளிட்ட பல திட்டங்கள் சிறு, குறு விவசாயிகளுக்கு 90% மற்றும் பிற விவசாயிகளுக்கு 75% மானியத்தில் வழங்கப்படுவதாக ஆட்சியர் தர்ப்பகராஜ் (செப்டம்பர் 10) அறிவித்துள்ளார்.

Similar News

News September 11, 2025

தி.மலையில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 10, 2025

தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு!

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (செப்:10) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News September 10, 2025

தி.மலை: விழிப்புணர்வு பணியில் ஆட்சியர்!

image

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பாக எச்ஐவி / எய்ட்ஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தினர். இதில், தி.மலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் இன்று கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

error: Content is protected !!