News September 10, 2025

ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில், கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கிட முகாம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று (10.09.2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் உள்ளார்.

Similar News

News September 11, 2025

கடலூர்: Gas Cylinder-க்கு அதிக பணம் கேட்டால் Call Now

image

கடலூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 11, 2025

கடலூர்: மின் நுகர்வோர் குறைதீர்வு முகாம்

image

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மின்துறை கோட்ட அலுவலகத்தில், இன்று (செப்.11) காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நடக்கிறது. இதில், விருத்தாசலம் கோட்ட அலுவலகத்தைச் சேர்ந்த உட் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள், மின்துறை சம்பந்தமாக குறைகளைக் கூறி நிவர்த்தி பெறலாம் என கோட்ட செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார்.

News September 11, 2025

கடலூர்: சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெற உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (11/09/2025) சிதம்பரம் செங்குந்தர் திருமண மண்டபம்; வரக்கால்பட்டு அபிராமி திருமண மண்டபம்; எய்யலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி; உச்சிமேடு சமுதாய நலக்கூடம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!