News September 10, 2025

ராணிபேட்டை: திமிரி கொலை வழக்கில் இரட்டை ஆயுள்

image

ராணிபேட்டை மாவட்டம், திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோசூர், நாகன்புரடை கிராமத்தில் தாய் மற்றும் தந்தையை கொலை செய்த வழக்கில் முரளிதரன் என்பவர் மீது திமிரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு 2000 அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News

News September 11, 2025

சாலையின் தரத்தினை ஆய்வு செய்த ஆட்சியர்

image

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா நேற்று கலவை பேரூராட்சி புதுகாலனியில் ரூ.55 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலையின் தரத்தினை ஆய்வு செய்தார். உடன் பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் அம்சா, வட்டாட்சியர் சரவணன். செயல் அலுவலர் ஜெய்குமார் மற்றும் பலர் உள்ளனர்.

News September 10, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை ரோந்து பணி

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (10.09.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் பற்றிய விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இவர்களை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 10, 2025

ராணிப்பேட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் ஆற்காடு நகராட்சியில் இந்திராணி ஜனகிராமன் திருமண மண்டபம், மேல்விஷாரம் நகராட்சியில் அண்ணாசாலை எச்.எம். ஆடிட்டோரியம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் குப்புசாமி திருமண மண்டபம், சோளிங்கர் வட்டாரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் திமிரி வட்டாரத்தில் கனியனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

error: Content is protected !!