News September 10, 2025

கோவையில் நூதன மோசடி: போலீசார் எச்சரிக்கை!

image

கோவையில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை உள்ள 7 மாதங்களில் மட்டும் சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள் ரூ.1,010 கோடியை இழந்தனர். சைபர் கிரைம் மோசடி தொடர்பாக 7 மாதத்தில் 88,479 புகார்கள் பெறப்பட்டுள்ளன. சைபர் கிரைம் மோசடியில் இழந்த பணத்தில் ரூ.314 கோடியை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர். டிஜிட்டல் கைது மூலமாக பொதுமக்கள் ரூ.97 கோடியை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. சைபர் குற்றங்களுக்கு புகார் அளிக்க 1930.

Similar News

News September 11, 2025

கோவை: ஏரியில் மூழ்கி உயிரிழப்பு

image

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (74). ரத்த அழுத்தம் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று குறிச்சி ஏரியில் மூழ்கி உயிரிழந்து கிடந்து உள்ளார். பின்னர் குறித்து தகவல் அறிந்த போத்தனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, உடனே மீட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 10, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (10.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 10, 2025

கோவையில் இலக்கை அடைய இலவச பயிற்சி!

image

கோவை இளைஞர்களே தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 600 காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் தேர்வுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்.21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இதற்கான எழுத்து தேர்வு நவம்பர் 09ம் தேதி நடைபெறும். இந்தநிலையில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்!SHARE

error: Content is protected !!