News September 10, 2025

Like பண்ணுங்க, Share பண்ணுங்க, Comment செய்யுங்க!

image

சில செய்திகள் உங்களை புன்னகைக்க வைக்கும். சில செய்திகள் கோபப்படுத்தும். வேறு சில செய்திகள், மற்றவர்களுக்கு ஷேர் பண்ண தூண்டும். இப்படி மனதில் தோணும் போது, உடனே அதை வெளிப்படுத்துங்கள். ஆம், உங்களுக்காகவே செய்திகளுக்கு கீழே லைக், டிஸ்லைக், ஷேர், கமென்ட் ஆப்ஷன்களை கொடுத்திருக்கிறோம். இவற்றை பயன்படுத்திப் பாருங்கள். அதுசரி, இந்த செய்திக்கு எத்தனை லைக்ஸ் போடப் போறீங்க?

Similar News

News September 11, 2025

ஏழைகளுக்கு எதிராக நிற்கும் திமுக: EPS காட்டம்

image

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஏழைகளுக்காக கொண்டுவரப்பட்ட அதிமுகவின் திட்டங்களை திமுக நிறுத்தியதாக EPS குற்றம்சாட்டினார். அதிமுக ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட கட்சி எனவும், அதன் தலைவர்கள் மக்களுக்கு என்ன தேவை என்பதை சிந்தித்தவர்கள் என்றும் EPS கூறியுள்ளார். தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாடு வளர்ச்சியடைந்தது போல பொய் செய்திகளை மட்டுமே திமுக பரப்பி வருவதாகவும் விமர்சித்தார்.

News September 11, 2025

‘அஜித் 64’ படத்தில் இணையும் மலையாள சூப்பர் ஸ்டார்?

image

அஜித்குமாரின் 64-வது படத்தில் நடிக்க மோகன் லால், ஸ்ரீலீலா ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதியில் அஜித் சென்னை திரும்புவதாகவும், இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க, ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார்.

News September 11, 2025

கத்தார் மீதான தாக்குதலுக்கு PM மோடி கண்டனம்

image

கத்தார் அரசர் தமீம் பின் ஹமாத்துடன் PM மோடி இன்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கத்தார் தலைநகர் தாஹாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்த அவர், இந்த தாக்குதல் ஆழ்ந்த கவலை அளிப்பதாக கூறினார். மேலும், பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னைகளை தீர்ப்பதற்கு இந்தியா ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தார். முன்னதாக, ஹமாஸ் உயர்மட்ட தலைவர்களை குறிவைத்து தாஹாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

error: Content is protected !!