News September 10, 2025

நடிகை லாவண்யா திரிபாதி அம்மா ஆனார் ❤️ ❤️

image

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து பிரபலமான நடிகை லாவண்யா திரிபாதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2023-ல் தெலுங்கு நடிகர் வருண் தேஜை இவர் கரம்பிடித்தார். சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதை லாவண்யா அறிவித்து இருந்தார். இந்நிலையில், அவருக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. வருணின் பெரியப்பாவான நடிகர் சிரஞ்சீவி, ஹாஸ்பிடலுக்கு சென்று தம்பதியை வாழ்த்தியுள்ளார்.

Similar News

News March 30, 2026

வேட்பாளர்களை அறிவித்தார் ராமதாஸ்

image

சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அதன்படி *அருள் – சேலம் மேற்கு, *முரளி சங்கர் – வந்தவாசி, *ம.க.ஸ்டாலின் – கும்பகோணம், *E.K.சுரேஷ் – விருத்தாசலம், *பாக்கம் சக்திவேல் – மயிலாடுதுறை ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>

News March 30, 2026

நாளை மறுநாள் பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் ஆணை

image

பங்குனி உத்திர விழாவையொட்டி, நாளை மறுநாள் (ஏப்.1-ம் தேதி) தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதேபோல், நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். முழு ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. SHARE IT

News March 30, 2026

1 கேஸ் சிலிண்டர் ₹6,500.. அதிர்ச்சி தகவல் வெளியானது

image

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. ஆனால், சென்னையில் தட்டுப்பாடு காரணமாக வணிக சிலிண்டர் கள்ளச் சந்தையில் ₹6,500 வரை விற்கப்பட்டு வருவதாக ஹோட்டல் நடத்துபவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், உணவு பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். உங்க ஊரில் டீ, காஃபி விலை உயர்த்தப்பட்டுள்ளதா?

error: Content is protected !!