News April 11, 2024
நெட்டிசன்களை விளாசிய ‘லவ்வர்’ பட நடிகை

லவ்வர் படத்தில் வரும் ஐஷு கதாபாத்திரத்தை விமர்சித்தவர்களுக்கு, நடிகை ரினி பதிலடி கொடுத்துள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், “படத்தில் வரும் கதாபாத்திரம் பிடிக்காததால், சில முட்டாள்கள் என்னை நேரடியாக திட்டுகிறார்கள். ஒரு நடிகையிடம் எப்படி இவர்களால் இழிவாக பேச முடிகிறது. கருத்துகளை அவமரியாதையுடன் காட்ட வேண்டிய அவசியமில்லை. கதாபாத்திரத்தை யாரும் சரியாக புரிந்துகொள்ளவில்லை” எனத் தெரிவித்தார்.
Similar News
News January 19, 2026
பட்டாவில் மாற்றம் செய்யணுமா?

நிலப் பட்டாவில் பிழைகளை திருத்த இனி இ-சேவை இணையதளம் மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். அதில் “Patta Chitta” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து விண்ணப்பப் படிவத்தில் உங்கள் பட்டாவில் உள்ள பிழையான விவரத்தையும், அதற்கான சரியான விவரத்தையும் குறிப்பிட்டு ஆதார ஆவணங்களை இணைக்கவும். அதை பெற்றவுடன் VAO, சர்வேயர் அல்லது RI(Revenue Inspector) நேரில் ஆய்வுசெய்து திருத்தங்கள் செய்து அதற்கான உத்தரவை வழங்குவார்கள்.
News January 19, 2026
BREAKING: விஜய் அடுத்த அதிரடி

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அவகாசத்தை மேலும் 20 நாள்கள் நீட்டிக்கக்கோரி, விஜய் உத்தரவின்பேரில் தவெக தரப்பில் SC-ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.18-ம் தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில், வரும் 30-ம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்தது. இந்நிலையில், பொங்கல் விடுமுறையை சுட்டிக்காட்டி, அவகாசத்தை நீட்டிக்க தவெக வலியுறுத்தியுள்ளது.
News January 19, 2026
வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது தெரியுமா?

விண்வெளி கருப்பாக இருக்கும்போது வானம் மட்டும் எப்படி நீல நிறத்தில் உள்ளது என என்றாவது யோசிச்சிருக்கீங்களா? உண்மையில், சூரிய ஒளி வளிமண்டலத்திற்குள் நுழையும்போது பல நிறங்களை வெளியிடுகிறது. ஆனால், பிற நிறங்களை விட நீலம் & ஊதா போன்ற நிறக்கீற்றுகள் குறுகிய அலையை கொண்டுள்ளதால், அது அதிகமாக சிதறி வானம் முழுவதும் படருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதனால்தான் வானம் நீல நிறத்தில் தெரிகிறது. SHARE.


