News April 11, 2024
குடிநீா்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கறம்பக்குடி அருகே குடிநீா் கோரி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனா். கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன்பத்தை ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு சில வாரங்களாக குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Similar News
News February 15, 2026
புதுக்கோட்டை: ரூ.2.10 லட்சம் மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 15, 2026
புதுக்கோட்டை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

புதுக்கோட்டை மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்க!
News February 15, 2026
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதுகை வருகை

புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட மாலையிடு தனியார் திருமண மஹாலில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. அதில் தமிழக துணை முதல்வரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்குகிறார் என புதுகை பிஆர்ஓ அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


