News September 10, 2025
GALLERY: ₹2 கோடிக்கு ஏர்போர்ட் லுக்.. அசத்திய ஹர்திக்!

வாழ்க்கை ஆடம்பரமாக இருப்பது கிரிக்கெட்டர்களுக்கு சகஜம் என்றாலும், ரசிகர்களுக்கு அது பெரும் ஈர்ப்புதான். அண்மையில், ஹர்திக் பாண்டியா ஏர்போர்ட்டுக்கு அணிந்து வந்த டிரஸ்ஸின் விலை சுமார் ₹2 கோடி இருக்கும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அவர் கையில் அணிந்திருந்த வாட்ச் மட்டும் ₹1.63 கோடி இருக்குமாம். நெட்டிசன்களும், ‘பல்லிறுக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்’ என கிண்டலாக பேசி வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News March 14, 2026
அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறுகிறதா?

பித்தப்பையில் கல் இருந்தால், இரத்த ஓட்டத்தில் பிலிரூபின் (Bilirubin) அளவு அதிகரிக்கும். இதனால், அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறும். பித்தப்பையில் இருந்து செல்லும் நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் பித்தம் படியும். இதன் விளைவாக, சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறும். மஞ்சள் காமாலைக்கும் வழிவகுக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனே டாக்டரை அணுகுங்கள் மக்களே!
News March 14, 2026
டிக்கெட் விலையை உயர்த்திய விமான நிறுவனங்கள்

விமான எரிபொருள் விலை உயர்வு எதிரொலியால் Air India-வைத் தொடர்ந்து, Indigo & Akasa Air நிறுவனங்களும் டிக்கெட் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இதனால் உள்நாட்டு டிக்கெட்களுக்கு ₹199 – ₹425 வரையும், வெளிநாட்டு பயணங்களுக்கு ₹1,300 – ₹18,000 வரையும் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால் விமான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
News March 14, 2026
நடிகை த்ரிஷாவின் புதிய PHOTOS

நடிகை த்ரிஷா சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு அவர் உற்சாகமூட்டுவார். அந்த வகையில், இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் வாடாமல்லி வண்ண புடவையில் இருக்கும் புதிய போட்டோஸை அவர் பதிவிட்டுள்ளார். மேலும், இயக்குநர் மணிரத்னத்துடன் எடுத்துக் கொண்ட போட்டோவை ஸ்டோரியாக வைத்துள்ளார். த்ரிஷாவின் பதிவுக்கு ரசிகர்கள் ❤️ விட்டு வருகின்றனர்.


