News September 10, 2025
EPS-க்கு கொலை மிரட்டல் விடுக்கவில்லை: உதயநிதி

அதிமுக ஐசியுவில் சென்றுவிடும் என DCM உதயநிதி சொன்னது, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பது போல் இருப்பதாக EPS தெரிவித்திருந்தார். இதற்கு விளக்கமளித்த உதயநிதி, பாஜகவின் சர்ஜரியால், அதிமுக ஐசியுவில் சேர்க்கப்படும் நிலையில் இருப்பதைதான் அப்படி சொன்னதாகவும், 100 ஆண்டுகள் உடல்நலத்தோடு EPS வாழவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், ஆம்புலன்ஸுக்கு வழிவிடுபவரே உண்மையான தலைவர் என EPS-ஐ விமர்சித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
அன்புமணியுடன் உள்ளவர்களுக்கு ராமதாஸ் தூது!

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில், அவருடன் உள்ளவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதேநேரம், அன்புமணியுடன் தொடர்பு வைத்துக்கொள்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார். தான் இல்லாமல் அன்புமணி, அவருடன் உள்ளவர்கள் யாரும் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க முடியாது என்ற அவர், பாமகவின் வளர்ச்சிக்கு குந்தகமாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
News September 11, 2025
WhatsApp-ல் இத பேசிடாதீங்க; அப்புறம் ஜெயில் தான்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் WhatsApp-ல் சில விஷயங்களை பேசினால் நீங்கள் கைது கூட செய்யப்படலாம். ➤சட்டத்துக்கு புறம்பான விஷயங்களை பேச வேண்டாம் ➤வெறுப்பு பேச்சு/அவதூறு கருத்துகளை பகிரக்கூடாது ➤மற்றவர்களின் படைப்பை உங்களுடையது என Claim பண்ணாதீங்க ➤பாலியல் தொந்தரவு கொடுக்க வேண்டாம். இந்த விஷயங்களை WhatsApp-ல் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் செய்யாமல் இருங்கள். SHARE.
News September 11, 2025
அன்புமணி தனி கட்சி தொடங்க ராமதாஸ் அட்வைஸ்

பாமக தனது உழைப்பால் உருவான கட்சி என்பதால் மகன் உள்ளிட்ட யாருக்கும் அதில் உரிமை இல்லை என ராமதாஸ் தடாலடியாக அறிவித்துள்ளார். சொந்த குடும்பத்திலேயே வேவு பார்க்கும் கேவலமான செயலை செய்த அன்புமணி, வேண்டுமானால் தனி கட்சி தொடங்கி கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளார். பாமகவில் அன்புமணியின் குடும்பத்தினர் தனியாக ஒரு கட்சியை நடத்தியதாகவும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.