News September 10, 2025

விழுப்புரம் இளைஞர்களுக்கு ரூ.6 லட்சம் மானியம்

image

விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்கு, முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க, ரூ.3-6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு, 20 – 45 வயதிற்குட்பட்ட, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் <>இங்கு<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ், வங்கியில் ரூ.10 – 20 லட்சம் வரை கடன் பெற்று, சொந்தமாக உழவர் நல சேவை மையத்தை அமைக்கலாம். SHARE பண்ணுங்க

Similar News

News September 10, 2025

விழுப்புரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.,10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 10, 2025

விழுப்புரம் மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

image

விழுப்புரம் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. (SHARE)

News September 10, 2025

பொன்முடி மீதான குவாரி வழக்கு ஒத்திவைப்பு

image

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை அரசு செம்மண் குவாரியில் விதிமீறி செம்மண் எடுத்து அரசுக்கு ரூ 28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி எம்எல்ஏ மீது 2012 ஆம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை விழுப்புரம்மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்நடந்து வரும் நிலையில் நேற்றுஓய்வு பெற்ற டிஎஸ்பிவிஜயராகவன் சாட்சியம்அளித்த நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!