News September 10, 2025

அரியலூர் வருகைதந்த சிறுபான்மை ஆணையக் குழு தலைவர்

image

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய குழு தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண் மற்றும் துணைத் தலைவர் எம்.எம்.அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று (10/09/2025) அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் அவர்களை வரவேற்றனர்.

Similar News

News September 10, 2025

வாராந்திர சிறப்பு மனு விசாரணை முகாம்

image

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில் இன்று (செப்டம்பர் 10) நடைபெற்றது. இதில் 22 மனுதாரர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து மனுக்களை அளித்தனர். மனுதாரர்களின் புகார்களை கேட்டுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர், உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

News September 10, 2025

அரியலூர்: வங்கி பணம் காணாமல் போகிறதா?

image

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <>இங்கே <<>>கிளிக் செய்து புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாருக்கு அழைத்து புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 10, 2025

அரியலூரில் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்து

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி நேரில் சந்தித்து வாழ்த்தினார். கல்வி வளர்ச்சிக்கு பங்களித்து சிறப்பு சாதனை புரிந்த ஆசிரியர்களின் உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!