News April 11, 2024
பி.எஸ்.ராகவன் காலமானார்

முன்னாள் தலைமைச்செயலாளர் பி.எஸ்.ராகவன் (97) சென்னையில் காலமானார். 1961இல் தேசிய ஒருமைப்பாட்டு குழுவில் செயலாளராக பொறுப்பேற்று, நாட்டின் பிரதமர்களான நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோருடன் பணியாற்றியவர். அதுமட்டுமல்ல, இவர் உணவுத்துறை கூடுதல் செயலாளராக இருந்தபோது தான் தமிழகத்துக்கு கூடுதல் அரசியை ஒதுக்கினார். இது, எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை கொண்டுவர பெரும் உதவியாக இருந்தது.
Similar News
News February 5, 2026
அரசியலில் இருந்து விலகலா.. அண்ணாமலை தெரிவித்தார்

தேர்தல் பொறுப்பிலிருந்து விலகிய அண்ணாமலை, அரசியலிலிருந்தே விலகுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தான் ஒருபோதும் அரசியலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று அண்ணாமலை உறுதிப்பட தெரிவித்துள்ளார். தேர்தல் பணி விலகலுக்கு தந்தையைக் கவனிக்க என காரணம் கூறினாலும், 6 தொகுதிகளுக்குள் அவரை அடக்கியதும், வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறுமா என்ற சந்தேகமும் தான் விலகலுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
News February 5, 2026
காங்கிரஸுக்கு அதிரடி Offer-களை வழங்கினாரா விஜய்?

தற்போது வரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்தாலும், திரை மறைவில் தவெக உடனும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக உடன் கூட்டணி அமைக்க விஜய் பல அதிரடி ஆஃபர்களை வழங்கி இருப்பதாக பேசப்படுகிறது. கூட்டணிக்கு வந்தால் 70 தொகுதிகள், 1 DCM பதவி, 6 அமைச்சர்கள் பதவி, லோக்சபா தேர்தலில் 28 தொகுதியை தவெக தருவதாக உறுதியளித்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
News February 5, 2026
போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் செங்கோட்டையன்

சிட்டிங் MLA-வாக இருந்த கோபி தொகுதியிலேயே (ஈரோடு) போட்டியிட மீண்டும் விருப்ப மனு அளிக்க உள்ளதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தை தவெக தான ஆளப்போகிறது என்ற அவர், TN-ல் உள்ள அனைத்து வீடுகளிலும் தவெகவின் பெயர் ஒலித்து கொண்டிருக்கிறது என்றார். மேலும், தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே விஜய்யின் இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.


