News September 10, 2025
தெருநாய்கள் அச்சத்தில் சென்னை மக்கள்

சென்னையில் கடந்த சில நாள்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிக்கு செல்ல கூடிய மாணவ, மாணவிகள் அச்சமடைகிறார்கள். மேலும், இரவு நேரத்தில் பைக்கில் செல்ல நபர்களை தெருநாய்கள் விரட்டி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு எப்போது தான் தீர்வு கிடைக்கும்? மக்களே உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News September 10, 2025
வார இறுதி நாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் தலா 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்டை நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in அல்லது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ள போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
News September 10, 2025
சென்னையில் திடீர் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னையில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. சென்னையில் இன்று மதியம் இரண்டு மணி வரையிலுமே வெயில் உச்சத்தில் இருந்த நிலையில்,அதன் பிறகு திடீரென மழை வெளுத்து வாங்கியாது. சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, சேப்பாக்கம், காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் பெய்த திடீர் மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. உங்க ஏரியால மழையா?.
News September 10, 2025
சென்னை மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

சென்னை மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <