News September 10, 2025
அவ்வளோ தான் பஞ்சாயத்து முடிஞ்சுது!

‘கூலி’ ஃப்ளாஷ்பேக் சீனில் SK தான் நடித்தார் என்ற கமெண்ட்கள் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்தன. லோகேஷ் பேட்டியில் De-aging முறையில் ரஜினியை தான் நடிக்க வைத்தோம் என கூறியும் பலரும் அதை ஒத்துக் கொள்ளவே இல்லை. ‘SK.. SK’ என்றே தொடர்ந்து கமெண்ட் செய்தனர். ‘ஒருவேள இருக்குமோ’ என பலரும் யோசித்துக் கொண்டிருந்த நிலையில், ஃபிளாஷ்பேக் சீனில் ரஜினி நடித்த போட்டோ வெளிவந்து, பஞ்சாயத்தை முடித்து வைத்துள்ளது.
Similar News
News March 14, 2026
பேரம் பேசும் அரசியல்வாதி பிரேமலதா: விந்தியா

தேமுதிக என்றாலே தேய்ந்து முடிந்த திக என விந்தியா விமர்சித்துள்ளார். சேலத்தில் பேசிய அவர், மண்டபத்துக்காக கருணாநிதியை எதிர்த்து கட்சியை ஆரம்பித்தார் விஜயகாந்த். ஆனால் தம்பியின் MP சீட்டுக்காக, ஸ்டாலினை அண்ணா என கூப்பிட்டு பிரேமலதா கூட்டணி சேர்ந்துவிட்டார் என்றார். எந்த கொள்கையும் இன்றி, கணவர் கொடுத்த கட்சியை வைத்து பேரம் பேசி வியாபாரம் செய்கிற ஒரே அரசியல்வாதி பிரேமலதா தான் எனவும் சாடியுள்ளார்.
News March 14, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

சர்வதேச சந்தையில் இந்த வாரத்தில் பெரும் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கம் விலை, வார இறுதியான இன்று தலைகீழாக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் தங்கம் $98(இந்திய மதிப்பில் ₹8,982) சரிந்து $5,020-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி 1 அவுன்ஸ் $5 குறைந்து $80 ஆக உள்ளது. இந்த வாரத்தில் மட்டும் 1 அவுன்ஸ் தங்கம் சுமார் $250(இந்திய மதிப்பில் ₹23,151) குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
News March 14, 2026
CM ஸ்டாலின் ₹2,000 கொடுப்பார்: அப்பாவு

வரும் தேர்தலில் திமுக குறைந்தபட்சம் 53% வாக்குகளுடன் வெற்றி பெறும் என அப்பாவு நம்பிக்கை தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், TN மக்கள் எப்போது தேர்தல் வரும், எப்போது CM ஸ்டாலினுக்கு நன்றிக்கடனாக வாக்களிக்கலாம் என காத்திருக்கிறார்கள் என்றார். மீண்டும் CM ஆக ஸ்டாலின் ஆட்சியில் அமர்வார் என்றும், அப்போது உரிமை தொகையாக ₹1,000 கொடுக்க மாட்டார், ₹2,000 கொடுப்பார் எனவும் கூறினார்.


