News September 10, 2025
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வருகை தந்து கொண்டிருக்கின்ற நிலையில் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவலால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News September 11, 2025
திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் குறைதீர்க்கும் கூட்டம்

தபால் சேவையைப் பற்றி விவாதிக்க திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் 26ம்தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் யோசனை மற்றும் புகார்களை பட்டாபிராமன், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம், திருப்பூர் 641 601 என்ற முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தினமும் ஏரியா வாரியாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர், செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.
News September 10, 2025
திருப்பூர்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

திருப்பூர் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <