News September 10, 2025
கள்ளக்குறிச்சி: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News September 10, 2025
குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் மாதாந்திர ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (10.09.2025) நடைபெற்றது.இதில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கேட்டறிந்து ஆய்வு செய்தார்
News September 10, 2025
கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து பணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (செப்.,10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
ஆட்சியர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள வீரசோழபுரம் பகுதியில் பொதுப்பணி துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் கட்டுமான பணியினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்