News September 10, 2025
குள்ளஞ்சாவடி பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டத்தில் வகுப்புகள் நடைபெறுவதைக் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News March 11, 2026
கடலூர்: 10-ம் வகுப்பு தேர்வில் 407 மாணவர்கள் ஆப்சென்ட்

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வை மாவட்டத்தில் 33,449 மாணவர்கள் எழுத ஏற்பாடு செய்யப்பட்டு 161 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், 407 மாணவ மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை எனவும், 33042 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 11, 2026
கடலூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE IT
News March 11, 2026
கடலூர்: தேவையற்ற PHONE CALLS வருதா?

கடலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


