News April 11, 2024
காவல் துறையினா் கொடி அணிவகுப்பு ஊா்வலம்

மக்களவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நாமக்கல் மாவட்ட காவல் துறை, வேலூா் உள்கோட்ட காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் பரமத்தி வேலூரில் நேற்று நடைபெற்றது. இந்த ஊா்வலத்தை பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா தொடங்கி வைத்தாா். வேலூா் காவல் ஆய்வாளா் ரங்கசாமி, உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் அணிவகுப்பு ஊா்வலத்தில் கலந்துகொண்டனா்.
Similar News
News July 9, 2025
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல்லில் இன்று (ஜூலை 8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் நுகர்வு அதிகரித்துள்ள போதிலும், முட்டை விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ரூ.5.75 ஆகவே நீடிக்கிறது.
News July 8, 2025
நாமக்கல்: நான்கு சக்கர இரவு ரோந்து காவலர்கள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று ஜூலை-08 நாமக்கல் ராஜமோகன் 94422-56423, வேலூர் ரவி 94438-33538 – ராசிபுரம் கோவிந்தசாமி 94981-69110- திருச்செங்கோடு டேவிட் பாலு 94865-40373- திம்மநாயக்கன்பட்டி ரவி 94981-68665- குமாரபாளையம் ரகுநாதன் 97884-48891ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News July 8, 2025
நாமக்கல்: இன்றைய இன்று இரவு ரோந்து காவலர்கள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் 08.07.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். நாமக்கல் கோவிந்தராசன் 94981 70004), ராசிபுரம் ஆனந்தகுமார் 94981 06533), திருச்செங்கோடு ராதா 94981 74333), வேலூர் ஷாஜகான் 9498167357), ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.