News September 10, 2025

கரூரில் தெரிய வேண்டிய முக்கிய இணையதளங்கள்!

image

▶️கரூர் மாவட்ட இணையதளம்: https://karur.nic.in/ இதில் மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், முக்கிய எண்கள் போன்றவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️கரூர் மாநகராட்சி: https://www.tnurbantree.tn.gov.in/karur/ இதில் மாநகராட்சி சார்ந்த புகார்கள், ஆவணங்கள் போன்ற சேவைகளைப் பெறலாம்.
▶️மாவட்ட நீதிமன்றம்: //karur.dcourts.gov.in/ இதில் நீதிமன்றம் சார்ந்த சேவைகள், வழக்கு குறித்த ஆவணங்களைப் பெறலாம்.

Similar News

News September 10, 2025

கரூர்: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெறும் இடங்கள்

image

கரூர் மாநகராட்சியில், வார்டு எண்.6,10-ற்க்கு வெங்கமேடு முத்து மஹாலிலும், கடவூர் வட்டாரத்தில், முள்ளிப்பாடி மற்றும் பாலவிடுதி ஆகிய ஊராட்சிகளுக்கு பாலவிடுதி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்திலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நாளை 11.09.2025 நடைபெறவுள்ளது. என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News September 10, 2025

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பொறுப்பேற்பு

image

கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக அபிராமி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற இணைப்பதிவாளருக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை கோட்ட பகுதிகளுக்கு உட்பட்ட கூட்டுறவு சங்க செயலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் என பலரும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News September 10, 2025

கரூர்: பழங்குடி இன மக்களுக்கு குரூப் 1 தேர்வு பயிற்சி!

image

கரூரில் வாழும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1- 2025 முதல்நிலை தேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு தாட்கோ சார்பாக முதன்மைத் தேர்விற்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. WWW.tahdco.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவிப்பு செய்துள்ளார்.

error: Content is protected !!