News September 10, 2025
பரமக்குடி: குரு பூஜைக்கு 23 நிபந்தனைகள் – ஆட்சியர்

பரமக்குடியில் (செப்.11) இமானுவேல் சேகரனாரின் குரு பூஜை நடைபெற இருக்கிறது. பூஜைக்கு வரும்போது அனுமதி பெற்று சொந்த வாகனங்களில் மட்டும் வர வேண்டும்; திறந்த வெளியில் வரக்கூடாது. மேலும், வாகனங்களில் ஜாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் கொண்ட பேனர்கள் வைக்கக் கூடாது, ஒலி பெருக்கி பயன்படுத்த கூடாது உள்ளிட்ட 23 நிபந்தனைகள் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சிங்ஜித் காலோனால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 7, 2026
இராமநாதபுரம் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் சேவை குறைதீர் முகாம்

இராமநாதபுரம் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் தபால் சேவை குறைதீர் முகாம் மார்ச்.19 காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. தபால், ஸ்பீடு போஸ்ட், மணியார்டர் உள்ளிட்ட சேவைகள் தொடர்பான புகார்களையும், சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு குறைகள் தொடர்பான மனுக்களையும் ரசீது எண் மற்றும் தேவையான விவரங்களுடன் அளிக்க வேண்டும். மார்ச்.16-க்குள் குறைகள் வந்து சேர வேண்டும் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 7, 2026
இராமநாதபுரம் மாவட்ட தாசில்தார் எண்கள்

▶️கடலாடி – 04576-266558
▶️கமுதி – 04576-223235
▶️முதுகுளத்தூர் – 04576-222223
▶️பரமக்குடி – 04564-226223
▶️இராஜசிங்கமங்கலம் – 04561-299699
▶️திருவாடானை – 04561-254221
▶️கீழக்கரை – 04567-241255
▶️இராமேஸ்வரம் – 04573-221252
▶️இராமநாதபுரம் – 04567-220352
இவை இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அலுவலக நேரத்தில் மட்டும் தேவைக்கு அழைக்கவும்.
News March 7, 2026
இராம்நாடு: புதிய அதிமுக பெண் மாநில நிர்வாகிக்கு வாழ்த்து

அதிமுக மாநில மகளிரணி இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள லீமா ரோஸ் மார்ட்டினை அதிமுக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாநில அம்மா பேரவை இணை செயலாளர் சதன் பிரபாகர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில இணைச்செயலாளர் நாகேந்திர சேதுபதி, பரமக்குடி நகர் செயலாளர் வின்சென்ட் ராஜா ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


