News September 10, 2025
சென்னை: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

சென்னை சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்)
Similar News
News September 10, 2025
சென்னை: கொலை வழக்கில் திமுக பிரமுகர் பேரனுக்கு ஜாமின்

சென்னை, திருமங்கலத்தில் கல்லூரி மாணவர் நிதின்சாயை கார் ஏற்றி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகியின் பேரன் சந்துருவுக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. காதல் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலால் இக்கொலை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மனுதாரர் கல்லூரி மாணவர் என்பதாலும், ஏற்கனவே 41 நாட்கள் சிறையில் இருந்ததாலும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
News September 10, 2025
CM ஸ்டாலின் நாளை கிருஷ்ணகிரி பயணம்

முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை (செப்.11) கிருஷ்ணகிரி செல்ல உள்ளார். நாளை காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து, ஓசூர் பேளகொண்டப்பள்ளி சென்றடையும் அவர், ஓசூரில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். மேலும், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் அவர், வரும் 12-ம் தேதி காலை 10 மணியளவில் விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.
News September 10, 2025
தெருநாய்கள் அச்சத்தில் சென்னை மக்கள்

சென்னையில் கடந்த சில நாள்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிக்கு செல்ல கூடிய மாணவ, மாணவிகள் அச்சமடைகிறார்கள். மேலும், இரவு நேரத்தில் பைக்கில் செல்ல நபர்களை தெருநாய்கள் விரட்டி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு எப்போது தான் தீர்வு கிடைக்கும்? மக்களே உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க.