News September 10, 2025

கடலூர்: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வருகின்ற 13.09.2025 அன்று பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் இளைஞர்கள் அனைவரும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 04142-290039 மற்றும் 9499055907, 9499055908 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 10, 2025

கடலூரில் எஸ்பி தலைமையில் பெட்டிஷன் மேளா

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் இன்று (10.9.2025) கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என கூறினார்.

News September 10, 2025

ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில், கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கிட முகாம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று (10.09.2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் உள்ளார்.

News September 10, 2025

கடலூர் மாவட்டம் ஒரு பார்வை!

image

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடலூர் மாவட்டம் மிக முக்கிய நகரமாக இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக கடலூர் மாவட்டம் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து 1993-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. தற்பொழுது கடலூர் மாவட்டம் 9 சட்டமன்ற தொகுதிகள், 2 நாடாளுமன்ற தொகுதிகள், 3 கோட்டங்கள், 10 தாலுகாக்கள், 32 உள்வட்டம் மற்றும் 883 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!