News September 10, 2025
திருப்பத்தூர் எஸ்.பி அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில் குற்ற வழக்கு தொடர்பு துறை துணை இயக்குனர் சிவகாமி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் மேலும் சில வழக்குகளை எவ்வாறு கையாள வேண்டும் என எடுத்துரைத்தார். காவல் துணை கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Similar News
News March 14, 2026
திருப்பத்தூர்: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க
News March 14, 2026
திருப்பத்தூர் வருகிறார் துணை முதல்வர்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று ஒரு நாள் முழுவதும் மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் பறக்க மாவட்ட ஆட்சியர் சிவசவுந்தரவள்ளி தடை விதித்துள்ளார். தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News March 14, 2026
திருப்பத்தூர்: பாலாற்றில் ஆண் சடலம் மீட்பு

வாணியம்பாடி அருகே மேட்டுப்பாளையம் பாலாற்றுப் பகுதியில் இன்று (13.03.2026) அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாகப் பொதுமக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமியக் காவல்துறையினர், உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


