News September 10, 2025
ஆளுநர் மாளிகையில் நவராத்திரி விழா

கிண்டி ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு 2025’ செப்டம்பர் 22, முதல் அக்டோபர் 1 வரை கொண்டாடப்பட உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி 22-ஆம் தேதி விழாவை தொடங்கி வைக்கவுள்ளார். தினமும் மாலை 4:00-5:00 மணி வழிபாடு, 5:00-6:00 மணி கலாச்சார நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 200 பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதில் பங்கேற்க https://tnrajbhavantour.tn.gov.in/navaratri/ மூலம் 20.09.2025க்குள் முன்பதிவு செய்யலாம்.
Similar News
News September 10, 2025
சென்னை: கனரா வங்கியில் ரூ.22,000 சம்பளத்தில் வேலை

சென்னை, இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியல் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News September 10, 2025
BREAKING: அடையாறு பகுதியில் ED சோதனை

சென்னை, அடையாறு பகுதியில் உள்ள மருத்துவர் இந்திரா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை நடைபெற்ற வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News September 10, 2025
சென்னை: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

சென்னை சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்)