News September 10, 2025

ஈரோடு: இன்று முகாம் நடைபெறும் இடங்கள்!

image

ஈரோடு மாவட்டத்தில் செப்டம்பர் 10ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற உள்ளன. அன்னபூரணி மஹால், சாஸ்திரி நகர் (ஈரோடு மாநகராட்சி மண்டலம்4) , மீனாட்சி திருமண மண்டபம் (பவானி நகராட்சி), ராசம்மாள் திருமண மண்டபம் (அவல்பூந்துறை பேரூராட்சி), ஜெ எஸ் மஹால் (கொளப்பலூர் பேரூராட்சி), ஸ்ரீ குமார் மஹால், விஜயபுரி (பெருந்துறை வட்டாரம்), PUMS தாமரைக்கரை (பர்கூர்) ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.

Similar News

News September 10, 2025

ஈரோடு: IMPORTANT மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 2025 முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு பயிற்சி கட்டணம், விடுதியில் தங்கி பயிலும் விடுதி கட்டணத்தை தாட்கோ ஏற்கும். தகுதியானோர், www.tahdco.com என்ற தாட்கோ இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு 0424-2259453 என்ற எண்ணை அழைக்கலாம்.

News September 10, 2025

ஈரோடு: NO EXAM ரயில்வேயில் 2418 பணியிடங்கள்!

image

ஈரோடு மக்களே மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th (அ) ITI தகுதி போதுமானது, மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க செப்.11 நாளையே கடைசி தேதி ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News September 10, 2025

ஈரோட்டில் அதிரடி 4 பேர் கைது!

image

சென்னிமலையை அடுத்த மாதேஸ்வரா நகர் அசோக் வயது 26 முன்பு விரோதம் காரணமாக நேற்று வீட்டில் இருந்த அசோக்கை அரவிந்த் கார்டன் பகுதியில் சேர்ந்த கணேசன், பி ஆர் எஸ் ரோடு தினேஷ்குமார் ,பி கே புதூர் பாரதி, காந்திநகர் மோகன்ராஜ் என நான்கு பேரும் அசோக் வீட்டுக்குச் சென்று கைகளாலும், ரிப்பர் கட்டையாலும் தாக்கியுள்ளனர்.இந்நிலையில் அசோக் அளித்த புகாரின் படி 4 பேரையும் சென்னிமலை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!