News September 10, 2025
அணி மாறி வாக்களித்த INDIA கூட்டணி MP-கள்

துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் NDA வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்துள்ளனர். தேர்தலில் INDIA கூட்டணியின் 315 எம்.பி.க்கள் வாக்களித்ததாக காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவில் சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன. எனவே, INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் எதிரணி வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்தது உறுதியாகியுள்ளது.
Similar News
News March 17, 2026
பெண்கள் பாதுகாப்பு.. திமுகவை சாடிய அன்புமணி

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாதவருக்கு எதற்கு முதல்வர் பதவி என்று அன்புமணி கடுமையாக சாடியுள்ளார். திமுகவினர் ஆட்சி செய்வதற்கு தகுதியற்றவர்கள் என்பதை TN பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று பேசிய அவர், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத இதுபோன்ற ஒரு ஆட்சியை இதுவரை பார்த்ததில்லை என்று திமுகவை கடுமையாக தாக்கினார். மேலும், இதை 3 மகள்களை பெற்ற ஒரு தந்தையாக சொல்வதாக தெரிவித்தார்.
News March 17, 2026
நாட்டின் வீரத் திருமகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

நாட்டு மக்கள் அமைதியாக வாழ, எல்லையில் உயிர் தியாகம் செய்யும் வீரர்கள் ஏராளம். காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு மக்கள் நாயகனை நாடு இழந்திருக்கிறது. எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பணியில் இருந்த நாயக் திலக் சிங், மயங்கி விழுந்துள்ளார். மருத்துவ சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதனையடுத்து, ராணுவ மரியாதையுடன் நாயக் திலக் சிங் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. RIP
News March 17, 2026
சி.வி.சண்முகத்தின் சர்ச்சை பேச்சுக்கு கனிமொழி கண்டனம்

திமுக கண்டன கூட்டத்தில் <<19406314>>நயன்தாரா<<>> குறித்த சி.வி.சண்முகத்தின் சர்ச்சை பேச்சுக்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் நாகரிகம் இல்லாத அதிமுகவினர் பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருப்பதாக கடுமையாக சாடியுள்ளார். இந்நிலையில், நயன்தாரா பெயரை எந்த நோக்கத்துடன் கூறவில்லை என்று சி.வி. சண்முகம் வருத்தம் தெரிவித்திருந்த நிலையிலும், அவர் மன்னிப்பு கேட்கக்கோரி கண்டனங்கள் வலுத்து வருகிறது.


