News September 10, 2025
தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர் விபரம்

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, போடிநாயக்கனூர், உத்தமபாளையம் தாலுகாக்களில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் கைபேசி எண்கள் மற்றும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர தேவைகளுக்கு இந்த விவரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று (08.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம்.
Similar News
News September 10, 2025
தேனியில் வெளுத்து வாங்க போகும் மழை

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று தேனி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
தேனி: போட்டி தேர்வர்களுக்கு GOOD NEWS

இந்திய ரிசர்வ் வங்கியில்(RBI) கிரேடு B ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 120 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து செப்.30 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேனி மாவட்டத்தில் வங்கி, போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். உங்களது நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.
News September 10, 2025
தேனி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தேனி மாவட்டத்தை சார்ந்த, முன்னாள் படைவீரர்கள் சிறப்புக் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 10.09.2025 ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்கள், படைப்பணியில் பணிபுரியும் வீரர்களை சார்ந்தோர்களுக்கு கோரிக்கைகள் ஏதுமிருப்பின், தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனு மற்றும் அடையாள அட்டை நகலுடன் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.