News September 10, 2025
ஆசிய கோப்பை: இந்திய அணியின் PLAYING XI இதுவா?

ஆசிய கோப்பையில் UAE அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் நாளை(செப்.10) இந்திய அணி களமிறங்குகிறது. Times of India தகவலின்படி, இந்திய அணியின் PLAYING XI-ல், கில் அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(C), அக்ஷர் படேல், ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா(WK), பும்ரா, வருண், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெறுவர் எனக் கூறப்படுகிறது. இந்த அணி எப்படி இருக்கிறது?
Similar News
News September 10, 2025
மூலிகை: பசலைக்கீரையும் பலவித நன்மைகளும்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி,
*பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் உடலை பாதுகாக்கும்.
*ஃபோலேட் இருப்பதால், பசலைக்கீரையை தவறாமல் சாப்பிட்டால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
*லுடின் நிறைந்திருப்பதால், கண் புரை & இதர கண் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும்.
*பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால் மூட்டுகளில் வலி குறையும். Share it to friends.
News September 10, 2025
ஹீரோயினே இல்லாத காதல் படத்தை இயக்கும் பிரேம்குமார்

விக்ரமை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் பிரேம்குமார் சமீபத்தில் அறிவித்தார். ஆனால், இதன் ஸ்கிரிப்ட் பணிகளுக்கு நேரமெடுக்கும் என்பதால், ஃபஹத் ஃபாசில் உடன் இணையவுள்ளாராம். இது குறைந்த கேரக்டர்களை கொண்ட ஆக்ஷன் படமாக உருவாகவுள்ளதாம். இதனையடுத்து, 9 கேரக்டர்களைக் கொண்டு அட்வெஞ்சர் படம், ஹீரோயின் இல்லாமல் காதல் படம் என அடுத்தடுத்து படம் இயக்கவுள்ளதாக பிரேம் கூறியுள்ளார்.
News September 10, 2025
45 மாதங்களில் 6,700 கொலைகள்: H.ராஜா தாக்கு

மீண்டும் திமுக அரசு அமைந்தால் அடுத்த தலைமுறை அழிந்துபோகும் என்று H.ராஜா கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 45 மாதங்களில் 6,700 கொலைகள் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். மேலும், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையில் CM ஸ்டாலின் பெரியார் படத்தை திறந்து வைத்த நிலையில், பணம் கட்டினால் அங்கு யார் வேண்டுமானாலும் படத்தை திறந்து வைக்கலாம், கூட்டம் நடத்தலாம் என கடுமையாக சாடினார்.