News September 10, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று செப்டம்பர் 9ஆம் தேதி இரவு ரோந்துப் பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களைத் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
Similar News
News September 10, 2025
திண்டுக்கல்லில் முற்றிலும் இலவசம்!

திண்டுக்கல்: நத்தம் சாலை, சிறுமலை பிரிவு பகுதியில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கான வீட்டு உபயோகபொருட்கள் பழுது பார்த்தல் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பு வருகிற 20-ந்தேதி தொடங்கி 30 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் கனரா வங்கியின் பயிற்சி மையத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
News September 10, 2025
திண்டுக்கல்: அஞ்சல் சேவை குறைதீர் முகாம்

அஞ்சல் சேவை தொடா்பான குறைதீா் முகாம் திண்டுக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வருகிற 22ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கெனவே, முகாமில் மனு அளித்து தீா்வு கிடைக்கவில்லை எனில், தங்களது குறைகளை மட்டும் அனுப்பலாம். புதிய புகாா் மனு தேவையில்லை. அஞ்சல் வாடிக்கையாளா்கள் தங்களது புகாா்களை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா், திண்டுக்கல் 624001 என்ற முகவரிக்கு வருகிற 17ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.
News September 10, 2025
JUST IN: திண்டுக்கல்: பள்ளிகளுக்கு விடுமுறை!

திண்டுக்கல்: கொடைக்கானலில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் 1ஆம் வகுப்பு – 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று(செப்.11) பள்ளி விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார் . மேலும், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெறுவதால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!