News September 10, 2025
அரியலூர்: மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குழந்தைகள் நல அமைப்பு சிறப்பு பணி (STF) மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் குழந்தை கடத்தல் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் குற்றங்களை தடுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சமூக நல அலுவலர், பாதுகாப்பு அலுவலர் மற்றும் சகோதர அலுவலர்கள் கலந்துகொண்டு செயல் திட்டங்களை அமைத்தனர்.
Similar News
News March 7, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசர காலத்தில் இந்த எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.

News March 6, 2026
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிர் தின விழா

வரும் (மார்ச்.8) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் அலுவலகத்தில், (06.03.2026) இன்று மகளிர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமை தாங்கி, பெண்களின் பெருமை குறித்து எடுத்துரைத்தார். இதில் ஏராளமான பெண் காவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.