News September 10, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆட்சியர் ஆய்வு

செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுகளத்தூர், துளார் மருவத்தூர் மற்றும் பொன்பரப்பி ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து பொன்பரப்பி கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
Similar News
News September 10, 2025
அரியலூர்: B.E படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

அரியலூர் பட்டதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 10, 2025
அரியலூர்: ரோந்து பணி காவலர் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக இரவு நேரங்களில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இன்று ரோந்து பணி செல்லக்கூடிய அதிகாரிகளின் பெயர் மற்றும் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவரச காலத்தில் மேல் குறிப்பிடப்பட்டுள்ள எண்களை தொடர்புகொண்டு பயன்பெறலாம். அல்லது 100ஐ அழைக்கவும். இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்துமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
News September 10, 2025
அரியலூர்: மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குழந்தைகள் நல அமைப்பு சிறப்பு பணி (STF) மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் குழந்தை கடத்தல் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் குற்றங்களை தடுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சமூக நல அலுவலர், பாதுகாப்பு அலுவலர் மற்றும் சகோதர அலுவலர்கள் கலந்துகொண்டு செயல் திட்டங்களை அமைத்தனர்.