News September 9, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (09.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
Similar News
News September 10, 2025
சென்னை: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

சென்னை சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்)
News September 10, 2025
சென்னை அருகே தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்

சென்னை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ஜீவன். இவரது தம்பி தேஜ். ஜீவனிடம், தேஜ் 1 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். ஆனால் ஜீவன் பலமுறை கேட்டும் பணத்தை கொடுக்கததாதல், ஆத்திரமடைந்த ஜீவன் தம்பியான தேஜை கத்தியால் வெட்டிக் கொலை செய்தானர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 10, 2025
சென்னை: 8 மாதங்களில் 228 பேர் பலி

சென்னை ரயில்வே கோட்டத்தில் நடப்பாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை ரயிலில் அடிபட்டு 228 பேர் உயிரிழந்துள்ளார் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், 34 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் தண்டவாளங்களைக் கடக்க நடைமேடை, சுரங்கப் பாதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், எந்தச் சூழலிலும் தண்டவாளங்களில் நுழையாதீர் என ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.