News September 9, 2025
தமிழ்நாட்டில் இருந்து 3-வது துணை ஜனாதிபதி

நாட்டிற்கு அதிக துணை ஜனாதிபதிகளை வழங்கிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இன்றைய துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்ற நிலையில், இதுவரை 3 துணை ஜனாதிபதிகளை தமிழகம் வழங்கியுள்ளது. இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன், 1952 முதல் 1962 வரை 10 ஆண்டுகள் பதவியில் இருந்தார். அடுத்ததாக, ராமசாமி வெங்கட்ராமன் 1984 முதல் 1987 வரை அப்பதவி வகித்தார்.
Similar News
News September 10, 2025
USA வரி குறைய வாய்ப்பா? டிரம்ப் கூறிய விஷயம்

PM மோடியிடம் வர்த்தகம் குறித்து வரும் வாரங்களில் பேசவுள்ளதாக US அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். PM மோடியை நல்ல நண்பர் என குறிப்பிட்ட அவர், இருநாடுகளுக்கும் ஏற்றார் போல முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியா மீதான USA வரிக்கு அமெரிக்கர்களே எதிர்ப்பு தெரிவித்ததால் டிரம்ப் தற்போது இறங்கிவந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்தியா மீதான USA வரி குறைக்கப்படுமா? பார்ப்போம்..
News September 10, 2025
நயினாரிடம் எனது மொபைல் எண் உள்ளது: OPS சூசகம்

EPS-ஐ தவிர யாரை CM வேட்பாளராக அறிவித்தாலும் NDA கூட்டணியில் மீண்டும் இணையத் தயார் என்று TTV சிக்னல் கொடுத்துவிட்டார். இந்நிலையில், நயினார் நாகேந்திரனிடம் என்னுடைய மொபைல் எண் உள்ளது, அவர் என்னை அழைத்தால் சந்திக்க தயார் என்று OPS-ம் கூறியுள்ளார். இதனிடையே, டெல்லி சென்று திரும்பிய செங்கோட்டையனோ, அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து அமித்ஷாவிடம் பேசியதாக தெரிவித்துள்ளார். NDA கூட்டணி வலுப்பெறுமா?
News September 10, 2025
உடல் புத்துணர்ச்சியுடன் இருக்க இந்த மூலிகை தேநீர் குடிங்க!

செரிமானத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் புத்துணர்ச்சி பெறவும் மிளகுக்கீரை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
*கொதிக்கும் தண்ணீரில் புதிய 3 மிளகுக்கீரை இலைகளை போட்டு, 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
*நன்கு கொதித்தவுடன், இந்த நீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
*அதில் தேவைப்பட்டால், தேன் சேர்த்து குடிக்கலாம். SHARE IT.