News September 9, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் முக்கிய அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தற்போது மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் அவர்களது தொலைபேசி எண்ணையும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்று வெளியிட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு (மழை வெள்ளம் போன்ற பாதிப்புக்கு கூட) காவல்துறையினரை தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Similar News
News September 10, 2025
JUST IN: திண்டுக்கல்: பள்ளிகளுக்கு விடுமுறை!

திண்டுக்கல்: கொடைக்கானலில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் 1ஆம் வகுப்பு – 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று(செப்.11) பள்ளி விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார் . மேலும், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெறுவதால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 10, 2025
திண்டுக்கல்: விபத்தில் முதியவர் துடிதுடித்து பலி!

திண்டுக்கல்: வடமதுரை அருகே உள்ள தும்மலக்குண்டு பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீரங்கன். இவர் அரவக்குறிச்சியிலிருந்து குமரண்டான்வலசு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஸ்ரீரங்கன் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் அவரை சேர்த்த போது அவர் இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 10, 2025
கனரா வங்கி சார்பில் பழுது பார்த்தல் பயிற்சி

திண்டுக்கல் அருகே நத்தம் சாலையில், சிறுமலை பிரிவு பகுதியில் கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கான வீட்டு உபயோகபொருட்கள் பழுது பார்த்தல் பயிற்சி இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. இந்தபயிற்சி வகுப்பு வருகிற 20-ந்தேதி தொடங்கி 30 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் கனரா வங்கியின் பயிற்சி மையத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.