News September 9, 2025
குடிநீரை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு

புதுவையில் மக்கள் மாசுபடிந்த குடிநீரை குடித்து வாந்தி, பேதியால் மூன்று பேர் இறந்துள்ளனர் 50க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் புதுச்சேரியில் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் இது குறித்து பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீரை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News September 10, 2025
புதுச்சேரி: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம் சார்பில் வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயக்கத் தலைவர் ரகு என்கின்ற ரகுநாதன் தலைமையில் ஆட்சியர் குலோத்துங்கனை சந்தித்து மனு அளிக்க நேற்று வந்திருந்தனர். நீண்ட நேரம் ஆகியதால் ஆட்சியில் இயக்கத்தை புறக்கணிப்பதாக கூறி இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
News September 10, 2025
புதுச்சேரி: நாளை குடிநீர் நிறுத்தம்

புதுவை அரியாங்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் நாளை (செப்.11) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அரியாங்குப்பம் மேற்கு மற்றும் அதனை சார்ந்த பகுதி களில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
News September 10, 2025
புதுச்சேரியில் தெரு நாய்களை பிடிப்பது குறித்து ஆலோசனை

புதுச்சேரியில் தெரு நாய்களை பிடிப்பது குறித்து உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அனுமதியில்லாமல், வளர்க்கப்படும் நாய்களை வளர்ப்போர் மீது அபராதம் நடவடிக்கை எடுப்பது, நகர மற்றும் கிராம பகுதியில் தெரு நாய்களை பெருக்கத்தை தடுக்க நகராட்சி மற்றும் கால்நடைதுறை மூலம் குழுக்கள் அமைத்து கருத்தடை செய்வது பற்றி ஆலோனை நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.