News September 9, 2025

இவர்களுக்கும் ₹1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்!

image

வீட்டில் ஓய்வூதியதாரர் இருந்தால், மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என பலரும் நினைக்கின்றனர். அண்மையில் திருத்தப்பட்ட விதிகளின்படி, ஓய்வூதியம் பெறுபவர்தான் உரிமைத் தொகை பெற முடியாது. அந்த வீட்டில் 21 வயது நிரம்பிய பெண் இருந்தால், ₹1,000 பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். அதனால், நவம்பர் வரை நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. SHARE IT.

Similar News

News April 10, 2026

வெள்ளி விலை கிலோவுக்கு ₹5,000 உயர்ந்தது

image

தங்கத்தைப் போன்றே வெள்ளி விலையும் இன்று (ஏப்.10) உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹5 உயர்ந்து ₹265-க்கும், 1 கிலோ வெள்ளி ₹5,000 அதிகரித்து ₹2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. நேற்று ₹5,000 குறைந்த நிலையில், இன்று ₹5,000 உயர்ந்துள்ளது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News April 10, 2026

உதயநிதியுடன் எல்.முருகன் கூட்டு: ஆதவ் அர்ஜுனா

image

‘ஜனநாயகன்’ படத்தை உதயநிதியுடன் சேர்ந்து எல்.முருகன் முடக்கியதாக ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டியுள்ளார். எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவுக்கு பராசக்தி படக்குழுவை அனுப்பிவைத்தது உதயநிதி என சாடிய அவர், விஜய்யை மிரட்டும் வகையிலும், மிகப்பெரிய இழப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் படத்தை வெளியிட்டுள்ளனர்; திமுகவினர் எம்ஜிஆருக்கும் இதேபோன்ற நெருக்கடிகளை கொடுத்தனர் என விமர்சித்துள்ளார்.

News April 10, 2026

எண்ணெய் கப்பல்களை தடுக்க முடியாது: டிரம்ப் சவால்

image

ஹார்முஸ் நீரிணையை கடக்க ஈரான் சுங்கக் கட்டணம் விதித்ததற்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரான் இல்லாமலும் எண்ணெய் விநியோகம் சீராக எப்படி நடக்கிறது என்பதை அனைவரும் பார்ப்பீர்கள் என்ற அவர், என்னை பொறுத்தவரையில் ஈரான் இருந்தாலும் ஒன்றுதான், இல்லையென்றாலும் ஒன்றுதான் என்றார். அந்நாட்டை அணு ஆயுதம் தயாரிக்க முடியாமல் தடுத்ததும் நான் தான் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

error: Content is protected !!