News September 9, 2025
துணை முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா இல்லம் வருகை

காஞ்சிபுரம் வருகை தந்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பேரறிஞர் அண்ணாதுரை இல்லத்திற்கு வருகை புரிந்தார். அங்கிருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் இருந்தனர்.
Similar News
News September 10, 2025
ஸ்ரீபெரும்புதுார் அருகே விபத்து

தென்காசியைச் சேர்ந்தவர் சரவண கார்த்திகேயன். இவர், தாம்பரத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று காலை பைக்கில் இருங்காட்டுக் கோட்டை சிப்காட் சாலையில் சென்ற போது, லாரி சரவண கார்த்திகேயன் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
News September 10, 2025
காஞ்சிபுரம் மக்களுக்கு எச்சரிக்கை

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய குறுஞ்செய்திகளில் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்.
News September 9, 2025
காஞ்சியில் நூலகத்தை திறந்து வைத்த துணை முதல்வர்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஏகாம்பரநாதர் சன்னதி தெரு பகுதியில் நூலகம் அமைக்கப்பட்டிருந்தது. குளிர்சாதன வசதியுடன் கூடிய நூலகத்தை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்த வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் ஆர் காந்தி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், சிவிஎம்பி எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.