News September 9, 2025

BREAKING: திருப்பத்தூர்-ஊராட்சி மன்ற தலைவர் நீக்கம்!

image

திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி கடந்த 6ம் தேதி நகை திருடிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் திமுக-விற்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இவரை இன்று (செப்.,9) கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். பாரதி மீது திருட்டு உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 7, 2026

திருப்பத்தூர்: கேஸ் விலை உயர்வு; மானியம் வரலையா?

image

திருப்பத்தூர் மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து எந்த நிறுவனம்(Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வரும். ஷேர் பண்ணுங்க!

News March 7, 2026

திருப்பத்தூர் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

image

திருப்பத்தூர் மக்கள உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967(அ)1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம்.உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!

News March 7, 2026

திருப்பத்தூர்: மாறிய நிலோபர்… மாறுமா வாணியம்பாடி?

image

கடந்த 2016 தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று அமைச்சரானவர் நிலோபர். சமீபத்தில் நடந்த திமுக கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இவர் திமுகவில் இணைந்தார். தற்போது வாணியம்பாடி தொகுதி அதிமுக வசம் இருக்கும் நிலையில், நிலோபர் கபிலால் சிறுபான்மையினர் ஓட்டு திமுகவிற்கு விழ அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். வாணியம்பாடி திமுகவின் கோட்டை ஆகுமா இல்லை கனவோடுநிற்குமா?

error: Content is protected !!