News September 9, 2025
சட்டமன்ற உறுதி குழு 11ஆம் தேதி குமரி வருகை

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவினர் (2024-2026) அதன் தலைவர் .வேல்முருகன் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 11.09.2025 (வியாழக்கிழமை) அன்று வருகை தரவுள்ளார்கள். அன்று பிற்பகல் 2 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 10, 2025
சுசீந்திரம் அருகே வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு

சிடிஎம்புரத்தை சேர்ந்த திவாகர் (65) நேற்று காலை மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.50,000 மற்றும் உண்டியலில் சேமித்திருந்த ரூ.40,000 உட்பட மொத்தம் ரூ.90,000 திருடப்பட்டிருந்தது. சுசீந்திரம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 10, 2025
குமரியில் கராத்தே மாஸ்டர் குண்டர் சட்டத்தில் கைது

தொலையாவட்டத்தில் தற்காப்புகலை பயிற்சி மையம் நடத்தும் கராத்தே மாஸ்டர் ஜெயின்மிலாடு(46) 9.8.2025 அன்று பயிற்சிக்கு வந்த 9-ம் வகுப்பு மாணவியை வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் ஜெயின்மிலாடுவை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று மாவட்ட எஸ்பி பரிந்துரையில் ஆட்சியர் உத்தரவில் ஜெயின்மிலாடுவை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
News September 10, 2025
குமடி: ஜெர்மன் மொழி தேர்வு பயிற்சி ஆட்சியர் அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி (German Language Test Training) அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com என்கிற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். இதில், பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வசதி உருவாக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.